மீட்பு பணியில் ஒருங்கிணைப்பு இல்லை என்று கவர்னர் குற்றம் சாட்டி உள்ள நிலையில் அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்
சில மத்திய அமைப்புடன் மாநில அரசின் மீட்பு பணியில் ஒருங்கிணைப்பு இல்லை என்றும் மாநில அரசு கேட்ட உதவிகளை மத்திய அமைப்புகள் உடனடியாக வழங்கியது என்றும் கவர்னர் ரவி தெரிவித்தார்.
மீட்பு பணிகளுக்கு எது தேவை என அரசிடம் முறையான திட்டம் இல்லை என்றும் வெள்ள நிவாரண ஆலோசனைக்கு ராஜ்பவன் அழைப்பு விடுத்தும் தமிழக அரசு வரவில்லை என்றும் மத்திய அமைப்புகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு ஆளுநர் ரவி தெரிவித்தார்.
இந்த நிலையில் தங்கம் தென்னரசு கவர்னரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார். அவர் தனது பதிலில் மத்திய அரசு அமைப்புகளுடன் மாநில அரசுக்கு ஒருங்கிணைப்பு இல்லை என்ற ஆளுநரின் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்தார். ஏழு டன் உணவு பொருள்களை ஹெலிகாப்டர் மூலம் மக்களுக்கு விநியோகிப்பதில் இணைந்தே செயல்பட்டோம் என்றும் கூறியுள்ளார்.