ஒவ்வொரு மாதமும் 16ஆம் தேதி வரை மட்டுமே மாதாந்திர பயண அட்டை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் பொங்கல் விடுமுறை காரணமாக காரணமாக மாதாந்திர பயண அட்டை பெறும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பேருந்து பயண அட்டை மக்களின் வசதிக்காக வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த அட்டையை பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 16ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொங்கல் விடுமுறை காரணமாக ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றதால் இந்த மாதம் மட்டும் ஜனவரி 24ஆம் தேதி வரை மாதாந்திர பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
மேலும் ரூபாய் 1000 பேருந்து பயண அட்டை, மாணவர்களுக்கான 50 சதவீத சலுகை பயண அட்டை ஆகியவற்றையும் ஜனவரி 24 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கால அவகாசம் முடிந்து விட்டது என்று கருதாமல் ஜனவரி 24ஆம் தேதிக்குள் பயணிகள் தங்களுடைய மாதாந்திர பயண அட்டையை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.