Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிவீட் அடித்த ரஜினி: கைகொட்டி சிரிக்கும் திராவிட தோழர்கள்!

Advertiesment
ரஜினிகாந்த்
, வெள்ளி, 8 நவம்பர் 2019 (13:35 IST)
நடிகர் ரஜினிகாந்த் பாஜக வலையில் நான் மாட்ட மாட்டேன் என கூறி இருப்பது காங்கிரஸ் மற்றும் திராவிச கட்சிகளின் வரவேற்பை பெற்றுள்ளது. 
 
சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது. இதன் புதிய அலுவலகத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. இச்சிலையை நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் திறந்துவைத்தனர்.  
 
இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பாஜக தரப்பில் இருந்து யாரும் என்னை வந்து அனுகவில்லை.  திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என பேசியிருந்தார். 
ரஜினியின் இந்த பேச்சுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ரஜினிகாந்த் ஆன்மீகவாதி; மதவாதி அல்ல. அதைத்தான் இன்றைய பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார். ரஜினிகாந்தின் சிறந்த பேட்டிகளில் இது ஒன்று என புகழ்ந்து இருந்தார். 
 
இவர் மட்டுமின்றி, திமுக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்  ஆகியோரும் ரஜினிகாந்த் கருத்தை வரவேற்று பாராட்டியுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாரடைப்பு: ஆண்களைவிட பெண்கள் அதிகம் உயிரிழக்க காரணம் என்ன?