மாரடைப்பால் ஆண்களைவிட பெண்களே அதிகமாக உயிரிழப்பதாக பிரிட்டன் இதய நோய் பவுண்டேஷன் தெரிவிக்கிறது.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாரடைப்பின் அறிகுறிகள் வேறுபடுவதால் இவ்வாறு நிகழ்கிறது.
ஆண் இதய நோயாளிகள் பெறுவதைப் போன்ற கவனிப்பை பெண் இதய நோயாளிகள் பெறுவதில்லை.
கடந்த 20 ஆண்டுகளில் பெண்களுக்கு மாரடைப்பு வருவது அதிகரித்துள்ளது என்கிறார் மருத்துவர் வனிதா.
மாரடைப்புக்கான அறிகுறிகள் பற்றி பெண்கள் அதிகமாக தெரிந்து வைத்திருப்பதில்லை.
இதய நோய்க்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான், அவர்கள் தாமதமாக சிகிச்சை பெறும் நிலைமை ஏற்படுகிறது.