Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெ.அன்பழகன் மறைவு: கட்சியை தாண்டி வேதனையுறும் அரசியல் தலைவர்கள்!

Advertiesment
ஜெ.அன்பழகன் மறைவு: கட்சியை தாண்டி வேதனையுறும் அரசியல் தலைவர்கள்!
, புதன், 10 ஜூன் 2020 (11:08 IST)
திமுக சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவிற்கு கட்சியினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 62. 
 
திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவர்களுக்கு ஜூன் 10ஆம் தேதியான இன்றுதான் பிறந்த நாள் என்பதும், பிறந்த நாளிலேயே அவர் மரணம் அடைந்திருப்பது திமுகவினர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
 
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவை பின்வருமாறு... 
 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: 
ஜெ.அன்பழகனின் மறைவு திமுகவிற்கு பேரிழப்பு. அவரின் மறைவுச் செய்தி பேரிடியாக தாக்குகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவர். அன்பழகன் மறைந்தார் என்பதை தாங்க முடியவில்லை
 
தமிழக பாஜக தலைவர் முருகன்: 
ஜெ.அன்பழகனின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அவரைச் சார்ந்த இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
 
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:
ஜெ.அன்பழகனின் மறைவு திமுகவிற்கு மட்டும் இழப்பு அல்ல; ஜனநாயகத்திற்கும், பொதுவாழ்விற்கும் ஈடற்ற இழப்பு. 
 
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்  கொள்கிறேன். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு தளர்வால் ஆபத்தை சந்திக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா!