Publish Date: Wed, 10 Jun 2020 (07:41 IST)
Updated Date: Wed, 10 Jun 2020 (07:42 IST)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஜெ.அன்பழகன் மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி திமுகவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ அவர்களுக்கு மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஜூன் 2ஆம் தேதி சென்னை கொரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது நேற்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியான மருத்துவமனையின் அறிக்கையின்படி ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ அவர்களின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வெளிவந்த தகவலின்படி ஜெ.அன்பழகன் மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்துள்ள தகவலால் திமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.