Publish Date: Wed, 10 Jun 2020 (08:35 IST)
Updated Date: Wed, 10 Jun 2020 (08:36 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் சிகிச்சையின் பலனின்றி காலமானார். இதனால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஜூன் 2ஆம் தேதி சென்னை கொரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலை அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளிவந்தது
இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின், மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடன் ஜெ.அன்பழகன் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார் என மருத்துவமனை அறிவித்துள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
62 வயதான ஜெ.அன்பழகனின் உடல் தொற்றுநோய் விதிகளின் படி சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது