வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் ஓட்டினால் மே ரெண்டு முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் அதன் எண்கள் தவிர வேறு எதுவும் எழுதக்கூடாது என்று ஏற்கனவே காவல்துறை அறிவுறுத்திய நிலையில் பல தங்களது பெயர் உள்பட பல்வேறு விஷயங்களை வாகன நம்பர் பிளேட்டில் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் வாகனங்களில் நம்பர் பிளேட்டை தவிர வேறு ஏதாவது எழுதப்பட்டிருந்தால், அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மே 2 முதல் இது அமலுக்கு வருது என்றும் எனவே வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதுவும் ஒட்ட வேண்டாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறைகள், சின்னங்கள் ஆகியவை எதுவும் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மே 2ஆம் தேதிக்கு பிறகு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும் என்றும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.