குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய காவல்துறை ஆய்வாளர் - காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (14:47 IST)
திருநெல்வேலியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர்களுக்கு தண்டனையாக பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி போன்ற காவல்நிலையத்திற்கு உட்பட்ட சுமார் 10 மேற்பட்ட குற்றவாளி இளைஞர்களை பிடித்து கருங்கற்களால் அவர்களின் பற்களை உடைத்தும், பிடுங்கியுள்ளார் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங். 
 
இதையடுத்து அவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் உதவி ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது. பின்னர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங், காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
இதையடுத்து கைதிகளின் பல்லை உடைத்தும், வாயைக் கிழித்தும் கொடுமை செய்த காவல் உதவி கண்காணிப்பாளரை கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கண்டங்கள் எழுப்பியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments