Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மழைநீர் கால்வாயில் மூதாட்டி எரித்துக் கொலை....போலீஸார் விசாரணை

Advertiesment
மழைநீர் கால்வாயில்  மூதாட்டி எரித்துக் கொலை....போலீஸார் விசாரணை
, சனி, 25 மார்ச் 2023 (18:20 IST)
சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகேயுள்ள மழை நீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டி சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகேயுள்ள மழை நீர் கால்வாயில் இன்று எரிந்த நிலையில் மூதாட்டியில் சடலம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடந்த மக்கள் போலீஸுக்குத் தகவல் அளித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார். மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில்,  மணவ்லி சிபிசிஎல் நகரைச் சேர்ந்த மூதாட்டி வடிவம்மாள்(72). இவருக்கு  3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில், மூதாட்டி நடக்க முடியாத நிலையில் இருந்ததாகவும், அவரை  யாரோ 4 கிமீ தூரம் தூக்கிவந்து மழைநீர் கால்வாயில் போட்டு, எரித்துக் கொன்றதாகவு, இது சொந்துக் காரணமாக நடந்த கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புவி நேரம்: இன்று இரவு 8:30 முதல் 9;30 வரை மின்விளக்குகளை அணைக்க WWF அமைப்பு வேண்டுகோள்