Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டூவீலரில் வந்த பெண்ணிடம் ஆபாசமாகப் பேசிய காவலர் – சஸ்பெண்ட் !

Advertiesment
டூவீலரில் வந்த பெண்ணிடம் ஆபாசமாகப் பேசிய காவலர் – சஸ்பெண்ட் !
, வியாழன், 12 செப்டம்பர் 2019 (12:14 IST)
கோவை மாவட்டத்தில் டூவீலர் ஓட்டி வந்த பெண்ணிடம் காவலர் ஒருவர் ஆபாசமாகப் பேசிய விவகாரத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த  பெண் ஒருவர் கடந்த செப் 10 ஆம் தேதி டூவீலரில் வந்தபோது அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடை அருகே வந்தபோது காவலர் ஒருவர் அவரைப் பின் தொடர ஆரம்பித்துள்ளார். இதனால் பதற்றமான அந்தப் பெண் வண்டியை வேகமாக ஓட்டிச்சென்றுள்ளார். அவரை நெருங்கிய அந்தக் காவலர் அவரிடம் ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ எனக் கூறி ஆபாசமாக பேசியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த பெண் அருகில் உள்ள ஒரு பேன்ஸி ஸ்டோருக்கு சென்று தனது கணவருக்குத் தகவல் சொல்லியுள்ளார். அந்தக் கடைக்கும் வந்த அந்த காவலர் அவரிடம் வரம்பு மீறிப் பேசியுள்ளார். அதற்குள் அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் வந்துவிட அவர்கள் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

விசாரணையில் அந்த காவலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரின் டிரைவர் என்பது தெரியவர அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனின் அமமுகவில் காமெடி நடிகருக்கு அமைப்பு செயலாளர் பதவி!