மோட்டார் பைக்கில் சீட் பெல்ட் போடாததால் அபராதம்: வைரலாகும் புகைப்படம்

Arun Prasath

புதன், 11 செப்டம்பர் 2019 (14:16 IST)
கோவையில் மோட்டர் பைக்கில் சென்றவர் சீட் பெல்ட் அணியாததால் அவருக்கு அபராதம் விதிக்கபட்டுள்ளது.

கோவை அருகே காளப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 7 ஆம் தேதி, தனது மோட்டார் பைக்கில் தமிழக கேரள எல்லையில் உள்ள வேலந்தாவளத்துக்கு சென்று திரும்பி கொண்டிருந்தார். அப்போது கவுண்டன் சாவடி அருகே வந்த போது  போலீஸார் கார்த்திக்கிடம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கார்த்திக் ஹெல்மெட் அணியவில்லை என்பதால் அவருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராத தொகைக்கான ரசீதையும் பெற்றார். பின்பு வீடு திரும்பிய கார்த்திக் அபராத தொகைக்கான ரசீதை பார்த்தபோது, அந்த ரசீதில் ”ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு” என்று குறிப்பிடுவதற்கு பதிலாக “சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்கு” என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் அபராத தொகையும் குறிப்பிடப்படவில்லை.

மோட்டர் பைக்கில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்த ரசீதை கார்த்திக் இணையத்தில் பதிவேற்றினார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இரட்டையரில் ஒருவரைக் கொன்றால் எல்லாம் கிடைக்கும் – கொலையாளியின் டைரியில் அதிர்ச்சி தகவல்கள் !