யூடுயூபர் மதனின் மனைவியை கைது செய்து போலீசார் விசாரணை !

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (17:23 IST)
ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாகப் பேசிய புகாரில் பப்ஜி மதன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது மனைவியைக் கைது செய்து போலீஸார் விசாரது செய்து வருகின்றனர்.

ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான வார்த்தைகளால் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து புளியந்தோப்பு காவல்நிலையத்தில் ஆஜராக மதனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் மதன் தலைமறைவானார். இந்நிலையில் பப்ஜி மதனின் தந்தை, மனைவி கிருத்திகா ஆகியோரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது மதனின் மனைவி கிருத்திகாவை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
மதன் யூடியூப் சேனலின் நிர்வாகி கிருத்திகா என்பது தெரிய வந்ததை அடுத்து போலீஸார் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் யூடியூபர் மதன் பப்ஜி கேமில் ஆபாசமாகப் பேசி ரூ. 7 லட்சம் வரை சம்பாதித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆபாசமாகப் பேசும்போது எதிர்த்தரப்பில் பேசும்ம் பெண்ணின் குரல் அவரது மனைவியின் குரல் எனவும் அவருடைய 2 சொகுசுக் கார்களை போலிஸார் பறிமுதல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments