Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைன் விளையாட்டில் பெண்களை ஆபாசமாக பேசிய மதன்! – ஆஜராக காவல்துறை உத்தரவு!

Advertiesment
ஆன்லைன் விளையாட்டில் பெண்களை ஆபாசமாக பேசிய மதன்! – ஆஜராக காவல்துறை உத்தரவு!
, ஞாயிறு, 13 ஜூன் 2021 (16:54 IST)
ஆன்லைன் விளையாட்டு மற்றும் யூட்யூப் சேனல்களில் பெண்களை இழிவாக பேசிய யூட்யூப் சேனல் பிரபலம் மதனை விசாரணைக்கு ஆஜராக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான வார்த்தைகளால் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பலரும் புகார் அளித்த நிலையில் சமீப காலமாக மதனை பின் தொடர்பவர்கள் சமூக வலைதளங்களில் மதனுக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை விசாரணைக்கு ஆஜராக டாக்சிக் மதனுக்கு புளியந்தோப்பு சைபர் க்ரைம் போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். மேலும் மதன் யூட்யூப் சேனலை முடக்கவும், வீடியோக்களை அழிக்கவும் வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

20 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவு! – தமிழக அரசு அதிரடி!