Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசங்கர் பாபாவின் பள்ளியின் அங்கீரத்தை ரத்து செய்ய பரிந்துரை !

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (16:46 IST)
சென்னை அருகே உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் அளித்த பாலியல் புகார் காரணமாக சிவசங்கர் பாபா சற்று முன்னர் டெல்லியில் கைது செய்யப்பட்டார் என்பதும் சிபிசிஐடி போலீசார் அவரை சென்னை கொண்டுவர ஏற்பாடு செய்து வருகின்றனர் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் சிவசங்கர் பாபா டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் என்றும் அவரை சென்னை அழைத்து செல்ல டெல்லி நீதிபதியிடம் சிபிசிஐடி போலீசார் மனு அளித்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இன்னும் சில நிமிடங்களில் டெல்லி நீதிமன்ற நீதிபதி சிவசங்கர் பாபாவை சென்னை அழைத்து செல்ல அனுமதி தருவார் என்று கூறப்படுகிறது. இதன்பிறகு அவர் சென்னை அழைத்து வரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. சென்னை நீதிமன்றத்தில் முறைப்படி ஆஜர் செய்த பின்னர் தான் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி குழந்தைகள் நல குழுமம் பரிந்துரை செய்துள்ளது.

அப்படி அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்தால் அங்குள்ள மாணவ, மாணவிகள் வேறு பள்ளியில் மாற்றலாவதற்கு என்ன வழிமுறைகள் என்பதை அரசு அறிவிக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி நிறுவனத்துடன் ரூ.5900 கோடி ஒப்பந்தம்.. அதிரடியாக ரத்து செய்த கென்யா அதிபர்..!

ரஜினியை திடீரென சந்தித்த சீமான்.. விஜய்க்கு செக் வைக்கப்பட்டதா?

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

அடுத்த கட்டுரையில்