Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சியாமளா நவராத்திரி வழிபாடு எவ்வாறு செய்யவேண்டும்...?

சியாமளா நவராத்திரி வழிபாடு எவ்வாறு செய்யவேண்டும்...?
சியாமளா நவராத்திரியின் 5-வது நாள் பஞ்சமி அன்று சரஸ்வதி தேவி அவதரித்த நாளாகக் கருதப்படுகிறது. எனவே இந்நாளில், வடநாட்டில் விஜயதசமி போன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வர். எனவே இந்நவராத்திரியானது சரஸ்வதி தேவியின் அருளையும் பெற்று தரும்.

தை அமாவாசை முடிந்து பிரதமை அன்று கலசத்தில் புனித நீர் நிரப்பி மாவிலை, தேங்காய் வைத்து; திலகம் இட்டு; மலர் மாலைகள் சூட்டி; பச்சை வஸ்திரம்  சாத்தி; அதில், இராஜ மாதங்கியை ஆவாஹனம் செய்து; சியாமளா தண்டகம், சியாமளா அஷ்டோத்திரம் மற்றும் சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.
 
வீணை மீட்ட தெரிந்தவர்கள் அம்பிகை முன் வீணை மீட்டி ஆராதிக்கலாம். மீனாட்சியம்மை பிள்ளை தமிழ் மற்றும் மீனாட்சியம்மை பதிகம் பாடலாம்.
 
அம்பிகைக்கு பிடித்தமான பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை ஒன்பது நாட்களும் படைக்க வேண்டும். மாதுளை சியாமளாவிற்கு மிகவும் பிடித்தமான பழமாகும். இவளை பூஜிக்கும் போது மனத்தூய்மை மிக முக்கியமான ஒன்றாகும். மனம் அலைபாய்வதைத் தவிர்த்து முழு மனதோடு வணங்கவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவராத்திரிகளின் வகைகளும் அதன் பலன்களும் !!