Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்றெழுத்து கட்சிகள் ஆபத்தானவை: மூன்றெழுத்து கட்சி பாமக தலைவர் கருத்து

Advertiesment
மூன்றெழுத்து கட்சிகள் ஆபத்தானவை: மூன்றெழுத்து கட்சி பாமக தலைவர் கருத்து
, வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (19:22 IST)
ஒருசில மூன்றெழுத்து கட்சிகளால் தமிழத்திற்கு ஆபத்து என பாமக என்ற மூன்றெழுத்து கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாமகவின் இளைஞரணி மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:

மூன்றெழுத்தில் கொண்ட அரசியல் கட்சிகள் பல இருக்கின்றன. பாமக கூட மூன்றெழுத்து கட்சிதான். இருப்பினும் ஒருசில அமைப்புகள், மூன்றெழுத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்றெழுத்து் கட்சியை, தமிழகத்தில் ஒருபோதும் வளரவிடக்கூடாது.

webdunia
எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில், மூன்றெழுத்துக் கட்சியை வேரூன்றவிடக் கூடாது. அதைத் தடுக்கவேண்டிய கடமை நமக்கு உண்டு. மூன்றெழுத்து கட்சி ஆபத்தானது என்று கூறியுள்ளார். இவர் குறிப்பிட்ட மூன்றெழுத்து கட்சி பாஜக என்று நெட்டிசன்கள் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குக் செல்ல ரூ.46 லட்சம் செலவு செய்த கவர்னர்