Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குக் செல்ல ரூ.46 லட்சம் செலவு செய்த கவர்னர்

அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குக் செல்ல ரூ.46 லட்சம் செலவு செய்த கவர்னர்
, வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (19:10 IST)
ஒடிஷா கவர்னர் கணேஷி தனது கவர்னர் அலுவலகத்தில் இருந்து ஹரியானாவில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு செல்ல ரூ.46 லட்சம் செலவு செய்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா கவர்னாரான கணேஷியின் குடும்பம் ஹரியானாவில் இருப்பதால் அவர் அவ்வப்போது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் என தெரிகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒடிஷாவில் இருந்து டெல்லிக்கு செல்ல ரூ.41 லட்சமும், டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் அவரது சொந்த ஊரான சிர்சா என்ற பகுதிக்கு செல்ல ரூ.4 லட்சமும் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த செலவுக்கு மாநில அரசும், ராஷ்டிரபதி பவனும் ஒப்புதல் வழங்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள்தான் ஆடம்பர பயணத்தால் அரசு பணத்தை வீணாக்குகின்றனர் என்றால் கவர்னரும் அதே செயலில் ஈடுபடுவதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கொம்பு அணையில் மதகுகளை அடுத்து தூணும் விரிசல்: அதிகாரிகள் அதிர்ச்சி