ஓரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் பிரதமர் மோடி மக்களுக்காக பணி செய்கிறார் என தமிழ் நாடு பாஜக தலைவ்ர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.
அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி உள்ளிட பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வரும் மக்களவை தேர்தலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கரூரில் போட்டியிடாமல் கோயம்புத்தூரில் போட்டியிடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் அவர் தமிழ் நாடு முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை பயணமும் கூட அவர் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் பிரதமர் மோடி மக்களுக்காக பணி செய்கிறார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது: பிரதமர் மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் மக்களுக்காகப் பணி செய்கிறார். 3 முறை பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்துள்ளார் மோடி. தமிழ் நாட்டில் வரும் மக்களவை தேர்தல் உண்மைக்கும், பொய்க்கும் இடையே நடைபெறும் தேர்தல் என்று தெரிவித்துள்ளார்.