Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சில்லறை கட்சிகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது..! அண்ணாமலைக்கு டி.ஆர்.பி ராஜா பதிலடி..!!!!

TRP Raja Annamalai

Senthil Velan

, செவ்வாய், 26 மார்ச் 2024 (15:55 IST)
டி.ஆர்.பி ராஜாவிற்கு என்று தனித்திறமை ஏதும் இல்லை என்ற அண்ணாமலையின் கருத்துக்கு சில்லறை கட்சிகளுக்கெல்லாம்  பதில் சொல்ல முடியாது என்று டிஆர்பி ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
 
நேற்றைய தினம் கோவையில் நடந்த பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அண்ணாமலை, தஞ்சாவூரை சேர்ந்த டிஆர்பி ராஜாவிற்கு என்று தனித்திறமை ஏதும் இல்லை என்றும் அவரது தந்தை பணம் சேர்த்து வைத்தார். இவர் அதைக்கொண்டு அரசியலுக்கு வந்தவர் என்றும் கடுமையாக விமர்சித்தார்.  டிஆர்பி ராஜா, தந்தையின் பணத்தைக்கொண்டு கோவை மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைத்து இருக்கிறார் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
 
கோவை மக்களை சில்லரை என்று சொல்லவும் ஆரம்பித்துவிட்டார் என்றும் டிஆர்பி ராஜா அல்லது அவர் அப்பா டிஆர் பாலு என யார் வேண்டுமென்றாலும் வரட்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் 
 
இந்நிலையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “களத்தில் எதிரியை கண்டறிந்து பணியாற்றினால் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறலாம் என்றார்.  கோவையைப் பொருத்தவரை எதிரணியினர் டெபாஸிட் இழக்கும் அளவிற்கு திமுக வெற்றி பெறும் என்றும் அற்புதமாண பணியை களப்பணியளர்கள் செய்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
 
தொடர்ந்து, திமுக-வினர் மரங்கள், செடிகளை அழித்து ஆறுகளில் நீரை அள்ளியதால் கோவையில் 2 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது என்ற அண்ணாமலையின் கூற்றுக்கு பதிலளித்த டிஆர்பி ராஜா, நான் இன்னும் அடுப்பையே பற்றவைக்கவில்லை என்று பதிலடி கொடுத்தார்.

 
தொடர்ந்து பாஜக மற்றும் அண்ணாமலை குறித்து கேட்டதற்கு, “பிரதான எதிர்க்கட்சியான அதிமுக என்ன சொன்னதென கூறுங்கள். பதில் சொல்கிறேன். சில்லறை கட்சிகள் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று அண்ணாமலை பற்றி டிஆர்பி ராஜா விமர்சித்து பேசி இருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுவையில் மும்முனை போட்டி.. வெற்றி பெறுவது யார்?