Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாக்களிக்கும்போது செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது- தேர்தல் அதிகாரி

வாக்களிக்கும்போது செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது- தேர்தல் அதிகாரி

Sinoj

, செவ்வாய், 26 மார்ச் 2024 (17:40 IST)
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தேர்தலை நடத்த முடிகிறது. தேசிய சராசரியைவிட தமிழ் நட்டில் வாக்களிக்கும் சதவீதம் அதிகமாக இருக்கிறது. ஊரகப்பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க  ஓட்டுப்போட வேண்டு.  ஜனநாயக கடமையைத் தவர விடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், 27 லட்சம் புதிய வாக்காளர்கள் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தைவிதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்கும்போது செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது....செல்போன் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றி கனியை பறிப்பது மட்டுமே பணி.! நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.! டிடிவி தினகரன்..!!