முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24ஆம் தேதி வருவதை அடுத்து தமிழக அரசின் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். அவருடைய முழு சுற்றுப்பயண விபரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
24–ந்தேதி மதியம் 3.15 மணி: குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் இருந்த விமானப்படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் புறப்படுகிறார்.
24–ந்தேதி மாலை 5.20 மணி: சென்னை விமான நிலையத்திற்கு மோடி வருகை
24–ந்தேதி மாலை 5.25 மணி: ஹெலிகாப்டர் மூலம் புறப்படுகிறார்.
24–ந்தேதி மாலை 6.00 மணி: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்துக்கு பிரதமர் வருகிறார்
24–ந்தேதி மாலை 6.30 மணி: நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்
24–ந்தேதி மாலை 6.50 மணி: கிண்டியில் உள்ள ராஜ் பவன் சென்றடைகிறார். ராஜ்பவனில் இரவு தங்குகிறார்
25-ந்தேதி காலை 9.40 மணி: ராஜ் பவனில் இருந்து பிரதமர் மோடி புறப்படுகிறார்
25-ந்தேதி காலை 10.40 மணி: புதுச்சேரி விமான நிலையம் சென்றடைகிறார்.
25-ந்தேதி காலை 11.35 மணி: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் செல்கிறார்
25-ந்தேதி பிற்பகல் 12 மணி: ஆரோவில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்
25-ந்தேதி பிற்பகல் 2.30 மணி: புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானம் செல்கிறார்.
25-ந்தேதி மாலை 4.25 மணி: சென்னை விமான நிலையம் வருகை தருகிறார்
25-ந்தேதி மாலை 6.50 மணி: சூரத் விமான நிலையம் சென்றடைகிறார்.