Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்.ஜி.ஆரும், ஜெ.வும் பெற்றோர்கள் ; மோடி நண்பர் மட்டுமே : செல்லூர் ராஜூ செண்டிமெண்ட்

Advertiesment
எம்.ஜி.ஆரும், ஜெ.வும் பெற்றோர்கள் ; மோடி நண்பர் மட்டுமே : செல்லூர் ராஜூ செண்டிமெண்ட்
, செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (13:45 IST)
அதிமுகவை பொறுத்தவரை பிரதமர் மோடி நண்பர் மட்டும்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 
சமீபத்தில் அதிமுக விழா ஒன்றில் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ் “ பிரதமர் மோடி கூறியதால்தான் இரு அணிகளையும் இணைத்தேன். கட்சியை காப்பாற்ற அணிகள் இணைப்பு அவசியம் என மோடி கூறினார். எனக்கு கட்சி பதவி மட்டும் போதும். அமைச்சர் பதவி வேண்டாம் என மோடியிடம் கூறினேன். ஜெ. எல்லாவற்றையும் எனக்கு கொடுத்து விட்டார். எனக்கு பதவி ஆசை கிடையாது” என அவர் பேசியுள்ளார். 
 
பாஜகவின் ஆதரவு மற்றும் பின்னணியிலேயே தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்கிற கருத்து நிலவி வரும் வேளையில், அதை உறுதி செய்யும் விதமாக ஓ.பி.எஸ் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்த போது, சட்டசபையில் ஜெ.வின் படத்திறப்பு விழாவிற்கு ஏன் பிரதமர் மோடியை அழைக்கவில்லை?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ “அதிமுக பொறுத்தவரை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எங்களுக்கு தந்தையும், தாயும் போன்றவர்கள். பிரதமர் மோடி எங்களுகு நண்பர் மட்டுமே” எனக் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காணாமல் போனதாக கூறப்பட்ட மாதவன் எங்கே இருக்கின்றார் தெரியுமா?