புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் வழக்கம்போல திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள பிரதமர் மோடி முதலாவதாக புதுச்சேரி சென்றுள்ளார். அங்கு ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். அங்கு சில நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர் பாஜக கட்சி பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்.
அப்போது கல்வி குறித்து பேசிய அவர்
” கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.”
என்ற குறளை மேற்கோள் காட்டி பேசினார். அதன் பொருள் “ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.” என்பதாகும்.
மேலும் தற்போது புதுச்சேரியில் காற்று மாறி வீசுவதாகவும், மக்கள் காங்கிரஸ் இல்லாத சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும் கூறியுள்ளார்.