Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது? தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (16:06 IST)
பிளஸ் டூ மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஜூலை 19-ஆம் தேதி வெளியாகும் என தமிழக அரசு தேர்வுத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது
 
தமிழக அரசு தேர்வுத்துறை இதுகுறித்து மேலும் கூறியபோது தமிழக மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் பட்டியல் 4 இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் ஜூலை 19ஆம் தேதி தேர்வு முடிவும், ஜூலை 21ஆம் தேதி முதல் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியல்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்ய பதிவெண் மற்றும் பிறந்த நாளை பதிவு செய்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்று கூறப்பட்ட நிலையில் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்களை தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள் 
 
இந்த நிலையில் தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்வு முடிவுகளும் 21ம் தேதி மதிப்பெண் பட்டியலும் வெளியாகும் என தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில் இந்த மதிப்பெண் பட்டியல் அதற்கு முன்கூட்டியே வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்
 
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dg2.tn.nic.in
www.dge.tn.gov.in
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments