Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிளஸ் 2 பள்ளி மாணவி பூச்சி மருத்து குடித்து தற்கொலை !

Advertiesment
Plus 2 schoolgirl committed suicide
, புதன், 10 ஆகஸ்ட் 2022 (18:14 IST)
விழுப்புரம் மாவட்டம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பூச்சி மருத்து குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மல்லிகப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மாம்பலப்பட்டு என்ற பகுதியில் பள்ளியில் அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி, காலையில் வகுப்பில் மயங்கி விழுந்தார். உடனே பள்ளி ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பூச்சி மருத்து குடித்துள்ளதாகவும் அவரை மேல்சிகிச்சைக்காக விழுப்புரம்  அருகேயுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர்.

அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவி இன்று சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவிக்கு அதேபகுதியைச் சேர்ந்த ஒரு மாணவருடன் காதல் இருந்ததாகவும், இது மாணவியின் வீட்டிற்கு தெரியவே அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்ததாகவும் இதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.   இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டீக் கடையில் திடீரென்று சிலிண்டர் வெடித்து விபத்து....