பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று மதியம் சென்னையிலுள்ள ஹோட்டல் கிரவுன் பிளாசாவில், தமிழக முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணைமுதல்வரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னிர் செல்வம் ஆகியோருடன் தேர்தல் கூட்டணி குறித்த இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதிமுக அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் இப்பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.இந்த சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முரளிதர ராவ், பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் இதற உறுப்பினர்கள்,ஆகியோர் இப்பேச்சு வார்த்தையில் பியூஸ் கோயலுடன் இணைந்திருந்தனர்.
இறுதியாக பேச்சுவார்த்தை இறுதிவடிவம் பெற்றதை அடுத்து பாஜவுக்கு 5 தொகுதிகள் என்று உறுதியானது. இதை செய்தியாளர்களிடமும் மகிழ்ச்சியுடன் கூறினார் பியூஸ் கோயல் .அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அருகில் இருந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்அமெரிக்காவிலிருந்து சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய விஜயகாந்த் தற்போது சென்னையிலுள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் விஜயகாந்தின் இல்லத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியூஸ் கோயல் விஜயகாந்த்தை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது. கோயலுடன் பொன் . ராதாகிருஷ்ணன் , முரளிதர ராவ் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.