Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வழக்கம்போல பண்ணிடுவானோன்னு பயந்தேன்: ஆர்யா லவ் மேட்டரை கலாய்த்த சதீஷ்

Advertiesment
வழக்கம்போல பண்ணிடுவானோன்னு பயந்தேன்: ஆர்யா லவ் மேட்டரை கலாய்த்த சதீஷ்
, திங்கள், 18 பிப்ரவரி 2019 (13:42 IST)
ஆர்யா சாயிஷா காதல் விவகாரம் தமக்கு முன்னதாகவே தெரியுமென காமெடி நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.
 
நடிகர் ஆர்யாவும் , நடிகை சாயிஷாவும் கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக பணியாற்றியதிலிருந்நு இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. மேலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. 
 
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியன்று, ஆர்யா, சாயிஷா இருவரும் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் காதல் விஷயத்தை உறுதி செய்து  விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக ஷாக் கொடுத்தனர். இவர்களுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்.
webdunia
 
இந்நிலையில் காமெடி நடிகரும் ஆர்யாவின் நண்பருமான சதீஷ் பேசுகையில், ஆர்யாவின் லவ் மேட்டர் கஜினிகாந்த் படத்தின் போதே எனக்கு தெரியும், சாயிஷாவுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார்.
 
ஒருபக்கம் வழக்கம்போல மற்ற பெண்களிடன் ஜோவியலாக பேசுவதைப் போல தான் ஆர்யா பேசுகிறார் என நினைத்தேன். ஆனால் முதலில் நினைத்தபடி தங்களது காதல் அறிவிப்பை இருவரும் வெளியிட்டுள்ளனர். அவர்களின் திருமண வாழ்க்கை நல்லபடியாக அமைய எனது வாழ்த்துக்கள் என சதீஷ் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக் பாஸ் யாஷிகா தூக்கிட்டு தற்கொலை? அடேய் யார் பார்த்த வேல டா இது.!