Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் ரூ.98ஐ தாண்டியது பெட்ரோல் விலை: டீசல் விலை என்ன தெரியுமா?

சென்னையில் ரூ.98ஐ தாண்டியது பெட்ரோல் விலை: டீசல் விலை என்ன தெரியுமா?
, வெள்ளி, 18 ஜூன் 2021 (07:25 IST)
இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தொடும் நிலைக்கு வந்துவிட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான அறிவிப்பின்படி சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 98ஐ தாண்டி உள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் ரூபாய் 100ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஏற்கனவே கொடைக்கானல் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் ரூபாய் 100ஐ தொட்டுவிட்ட நிலையில் சென்னையிலும் விரைவில் 100ஐ தொட்டு விடும் என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்துக் கொண்டிருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளதால் மத்திய மாநில அரசுகள் இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் ரூபாய் 98.14க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 27 காசுகள் உயர்ந்ததால் லிட்டர் விலை ரூபாய் 92.31 விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

17.81 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!