Publish Date: Thu, 17 Jun 2021 (10:15 IST)
Updated Date: Thu, 17 Jun 2021 (11:20 IST)
கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று சவரனுக்கு விலை ரூ.496 சரிந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்து, சவரன் ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,515-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வௌ்ளியின் விலை ரூ.75.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.