Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தில் ஒருதலை காதல்! – தாலி கட்டியவருக்கு கிடைத்த தர்ம அடி!

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (14:04 IST)
வேலூர் அருகே ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணுக்கு ஆசாமி ஒருவர் பேருந்தில் வைத்து தாலி கட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அருகே உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கல்லூரி காலத்திலிருந்தே ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

இதையறிந்த ஜெகன் அந்த பெண்ணிடம் சென்று தன் காதலை தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த பெண் அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அடிக்கடி அந்த பெண்ணை ஜெகன் காதல் தொல்லை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் சென்ற பேருந்தில் ஏறிய ஜெகன் யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென்று பைக்குள் வைத்திருந்த தாலியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தில் கட்டியுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிடவே பேருந்தில் இருந்த பொதுமக்கள் ஜெகனை அடித்து துவைத்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். இளம்பெண்ணுக்கு ஓடும் பேருந்தில் தாலி கட்டிய சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments