Publish Date: Tue, 10 Dec 2019 (11:40 IST)
Updated Date: Tue, 10 Dec 2019 (11:47 IST)
மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை திருமா தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததற்கு இடையே மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர உத்தரவை பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் மறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் சட்டவிரோதமானது அல்ல என கூறி சென்னை உயர்நீதிமன்றம் திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்தது.