Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''ஜேம்ஸ் வசந்தை மக்கள் புறக்கணிப்பார்கள்’’ - அர்ஜூன் சம்பத் டுவீட்

Advertiesment
People ignore James Vasanth
, புதன், 29 மார்ச் 2023 (19:09 IST)
''திமுக ஊடகங்களின் பின்னணியில் செயல்படும் ஜேம்ஸை  மக்கள் புறக்கணிப்பார்கள்’’ என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரபல தனியார் ஊடகத்திற்குப் பேட்டியளித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த்திடம் இளையராஜா பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, அவர் கூகுள் அலுவலகத்தில் இளையராஜா இயேசு குறித்தும், கிறிஸ்தவ மதம் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறியதைச் சுட்டிக்காட்டி, அவரை மட்டமான மனிதன் என்று விமர்சித்தார்.

இசைஞானி இளையராஜாவைப் பற்றி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறிய கருத்துக்கு  இந்து மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான அர்ஜூன் சம்பத் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், ‘’இசைஞானி இளையராஜாவை மத காழ்ப்புணர்ச்சியுடன் இழிவு படுத்தி பேசியுள்ள ஜேம்ஸ் வசந்தனுக்கு கண்டனம்! இரமண மகரிஷியின் உயிர்த்தெழுதல் குறித்து அவமதித்து பேசிய கிறிஸ்தவ மத வெறியன் ஜேம்ஸ் வசந்தன்!

தமிழின் போர்வையில் திமுக ஊடகங்களின் பின்னணியில் செயல்படும் ஜேம்ஸை  மக்கள் புறக்கணிப்பார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயிர் பாக்கெட்டில் இந்தி மொழி.....''மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!'' முதல்வர் முக.ஸ்டாலின் டுவீட்