இம்மையில் துக்கம் அடைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களை தேவன் தேற்றுவார்.
பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் வாக்களித்த இடத்தை அவர்கள் பெறுவார்கள்.
பிறரிடம் இரக்கம் காட்டுகிறவர்கள் பாக்கியவான்கள். அவருக்கு கருணை கிடைக்கும்.
தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் கர்த்தருக்கு நெருக்கத்தில் இருப்பார்கள்.
பரலோகத்தில் இருக்கும் பிதா உங்களுக்கு நற்குண்டங்கள் கொண்டவராய் இருப்பது போல நீங்களும் பூரணராக இருங்கள்.
நரகத்தின் வாசல் எளிமையானது அது அகன்றதாகவுள்ளது. ஆனால், பரலோகம் செல்லும் வழி குறுகலானது அதில் நுழையுங்கள்.
அறிவில்லாதவன் கவுரமாய் இருந்தாலும், அவன் அழிந்து போகும் விலங்குகளுக்கு ஒப்பானவன்.
ஒருவன் தன் நண்பர்களுக்குத் தன் உயிரைக் கொடுப்பதைவிட பெரிய அன்பு எதிலுமில்லை.