எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி ராஜினாமா? தொகுதிக்குள் சரிந்ததா செல்வாக்கு??

வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (12:51 IST)
செந்தில் பாலாஜிக்கு எதிராக அவரது தொகுதியில் எழுந்துள்ள குரல் அவர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. 
 
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நல்ல மரியாதை வழங்கினார். இடைத்தேர்தலில் வேட்பாளராகி, செல்வாக்கை வைத்து  வெற்றி பெற்றார். 
 
ஆனால், தனது வெற்றிக்காக பிரச்சாரத்தின் போது அனைவருக்கும் 3 செண்ட் நிலம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், பதவிக்கு வந்ததும் நிலம் குறித்து பேச்சே எடுக்கவில்லையாம். இதனால் தொகுதி மக்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. 
சமீபத்தில் அவரது தொகுதிக்கு சென்ற போது மக்கள் அவரிடம் 3 செண்ட் நிலம் குறித்து கேட்டதாகவும், உங்களால் சொன்னதை செய்ய முடிவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள் என கடுப்புடன் பேசியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
ஆனால் செந்திபாலாஜியின் நெருங்கிய வட்டாரத்தில் இது குறித்து கேட்ட போது, திமுக இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பெற்றுவிடும், அதேபோல மத்தியில் காங்கிரச் ஆட்சி அமைத்துவிடும் என்ற நம்பிக்கையில் செந்தில் பாலாஜி அந்த வாக்குறுதியை தந்தார். ஆனால், இரண்டும் நடக்காததால் நிலைமை இப்படி உள்ளது என தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பேனர் வைத்தால் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன்! – ஸ்டாலின் அதிரடி