ப.சிதம்பரத்தை போலவே தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படுவார் என இன்று மாலை பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியிருக்கும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அரசியல் ஆலோசகர் ஒருவர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை சந்தித்துள்ளதாக வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தின் பாஜக தேர்தல் மேற்பார்வையாளராக இருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை திமுகவின் அரசியல் ஆலோசகர் சுனில் என்பவர் சமீபத்தில் சந்தித்ததாகவும் இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றதாகவும், இந்த சந்திப்பில் இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது
அதே சமயம் தன்னுடைய தனிப்பட்ட தொடர்புகள் காரணமாக மத்திய அமைச்சர் பியூஷ் அவர்களை சுனில் சந்தித்தாரா? அல்லது ஸ்டாலின் ஒப்புதலுடன் சந்தித்தாரா? என்பது குறித்து பாஜக மற்றும் திமுக வட்டாரங்களிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இல்லை. இருப்பினும் இந்த சந்திப்பு நட்நதது உறுதி என்பதை மட்டும் இந்த வட்டாரங்கள் கூறிவரும் நிலையில் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மத்திய அரசு அறிவிக்கும் ஒரு சில அறிவிப்புகளுக்கு திமுக தலைவர் எதிர்ப்பு தெரிவித்த உடன் மத்திய அரசு பின்வாங்குவதும், மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கையில் திமுக தலைவர் பின்வாங்குவதையும் பார்க்கும்போது திமுக மற்றும் பாஜக கட்சிகள் இடையே மறைமுக தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகத்தை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது