அதிக கட்டணம் செலுத்தி குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டாம், அரசுப்பள்ளிகளை ஆதரிக்க குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் தனியார் பள்ளியின் மோகம் இன்னும் பெற்றோர்களுக்கு முற்றிலும் நீங்கவில்லை
இந்த நிலையில் தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ள பிரி.கே.ஜி,.எல்.கே.ஜி.யு.கே.ஜி ஆகிய மூன்று வகுப்புகளுக்கு இன்று விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் பெற்றோர்கள் நேற்றிரவு முதலே பள்ளி வாசலில் வரிசையில் நிற்கின்றனர்.
.இந்த பள்ளி, குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுப்பதில் சிறந்த பள்ளி என்றும், கட்டணத்திலும் சிறந்த பள்ளியாக இருப்பதால் இரவு முழுவதும் காத்து கிடப்பதாக வரிசையில் பெற்றோர்கள் தெரிவித்தனர்.