Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

40 முறை கற்பழிக்கப்பட்ட சிறுமி: பள்ளியிலேயே அரங்கேறிய வக்கிரம்!

Advertiesment
கற்பழிப்பு
, வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (19:47 IST)
அமெரிக்காவில் 12 வயதான சிறுமி ஒருவர் பள்ளி ஊழியர் ஒருவரால் பாலியல் அடிமை போல நடத்தப்பட்டு 40 முறை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
 
தற்போது 20 வயதான மாணவி ஒருவர் அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள பள்ளி ஒன்றின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். குறித்த அந்த பள்ளியில் காப்பாளராக 39 வயதான அம்பியோரிக்ஸ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
 
அவர் அந்த மாணவி 12 வயதாக இருக்கும் போது பள்ளியின் தனியான அறை ஒன்றில் வைத்து 40 முறை கற்பழித்துள்ளார். குறித்த இந்த வக்கிர சம்பவம் அந்த பள்ளி நிர்வாகத்திற்கு தெரியும். ஆனால் அவர்கள் இந்த சம்பவத்தை மூடி மறைத்துள்ளனர். எனவே பள்ளி மீது வழக்கு தொடர்ந்துள்ளார் அந்த மாணவி.
 
இந்த நபர் கடந்த 2004-ஆம் ஆண்டு பணி நேரத்தில் மது அருந்தியதை கண்டு பொறியாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் தான் இந்த பலாத்கார சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

17 வயது மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை!