Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை கிண்டியில் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த கார்! பெரும் பரபரப்பு

Advertiesment
சென்னை கிண்டியில் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த கார்! பெரும் பரபரப்பு
, சனி, 3 பிப்ரவரி 2018 (06:16 IST)
சென்னை கிண்டி அருகே உள்ள சின்னமலை மெட்ரோ நிலையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை கவனித்த பொதுமக்கள் காரை ஓட்டுபவரிடம் எச்சரிக்க, கார் உடனே நிறுத்தப்பட்டது.

கார் நிறுத்தப்பட்ட ஒருசில விநாடிகள் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. இதனையடுத்து காரில் இருந்து 69 வயது தண்டபாணி என்பவரும் அவருடைய மனைவி தனலட்சுமி என்பவரும் உடனே அவசர அவசரமாக இருந்து இறங்கியதால் உயிர் தப்பினர்

இதுகுறித்து தகவல் அறிந்த கிண்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து இரும்பு எலும்புக்கூடு போன்று ஆகிவிட்டது. இது பற்றி கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போக்குவரத்து போலீசார் சட்டையில் கேமிரா! இனி லஞ்சம் வாங்க முடியாதா?