Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனின் கீழ்த்தரமான செயல் - விரக்தியில் பெற்றோர் தற்கொலை

Advertiesment
மகனின் கீழ்த்தரமான செயல் - விரக்தியில் பெற்றோர் தற்கொலை
, புதன், 3 அக்டோபர் 2018 (10:28 IST)
பெற்ற மகன் பணமோசடியில் ஈடுபட்டதால், அவனின் பெற்றோர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் எல்.ஜி.பி. நகரை சேர்ந்த பாபு  என்பவன், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மக்கள் பலரிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்துள்ளான். பணம் கொடுத்தவர்கள் பாபுவை மிரட்டவே, பாபு தனது வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டான்.
 
இந்நிலையில் பணத்தை பறிகொடுத்தவர்கள், பாபுவின் வீட்டிற்கு சென்று அவனின் பெற்றோரிடம் தங்களது பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளனர். கடன்காரர்களின் தொல்லை அதிகரிக்கவே மனமுடைந்த பாபுவின் பெற்றோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
 
அதன்படி நேற்று நள்ளிரவு பாபுவின் பெற்றோர் இருவரும் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டனர். இதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய பாபுவை போலீஸார் தேடி வருகின்றனர். மகன் செய்த ஃப்ராடு வேலையால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவமனையில் கருணாஸ் அனுமதி! கைது நடவடிக்கைக்கு பயந்தா?