Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியைக் அரிவாளால் வெட்டிய கணவன் போலீஸுக்கு பயந்து தற்கொலை

Advertiesment
மனைவியைக் அரிவாளால் வெட்டிய கணவன் போலீஸுக்கு பயந்து தற்கொலை
, திங்கள், 1 அக்டோபர் 2018 (09:07 IST)
குமரியில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் போலீஸுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் கனகப்பபுரத்தை சேர்ந்தவர் டால்டன் செல்வ எட்வர்ட்(40). இவர் ஒரு வக்கீல். இவருக்கு ஜெகதீஷ் ஷைனி (33) என்ற மனைவியும் 4 வயதில் ஒரு மகனும், 2½ வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி அரசு கல்லூரி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
 
இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்களுக்குள் சண்டை முற்றிப்போகவே எட்வர்ட் தனது மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதற்கிடையே தப்பித்து ஓடிய எட்வர்டை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், எட்வர்ட் போலீஸுக்கு பயந்து கர்நாடக மாநிலம் மண்டியா அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தோனேஷியா நிலநடுக்கம்: பலரது உயிரை காப்பாற்றியவர் பரிதாப மரணம்