Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரு குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை : இப்படி ஒரு காரணமா?

Advertiesment
இரு குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை : இப்படி ஒரு காரணமா?
, செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (11:59 IST)
தனது இரு குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட விவகாரம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
வேலூரை அடுத்த மேல்மொணவூர் பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவர் ஒரு ஆடை நிறுவனம் ஒன்றில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கமலா என்கிற மனைவியும், மேகலா(9) மற்றும் திவ்யகலா(7) என்கிற மகளும் இருந்தனர். கமலா கீரை வியாபாரம் செய்து வந்தார்.
 
இந்நிலையில், நேற்று மாலை கமலா வீடு திரும்பிய அவரின் இரு குழந்தைகளும் இறந்து கிடந்தனர். அதேபோல், வெங்கடேசன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியில் கமலா கத்தி கதறி கூச்சல் போட்டார்.
 
இதையடுத்து, அவரது வீட்டில் கூடிய அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். முதலில் கடன் பிரச்சனை காரணமாகவே வெங்கடேசன் இப்படி செய்திருப்பார் என பலரும் நினைத்தனர். ஆனால், போலீசாரின் விசாரணையில் வேறு காரணம் இருப்பது தெரியவந்துள்ளது.
 
அதாவது, கமலா வெளியே சென்று கீரை வியாபாரம் செய்வது வெங்கடேசனுக்கு பிடிக்கவில்லை. எனவே, இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 
 
இதனால், மனமுடைந்த வெங்கடேசன், மனைவி இல்லாத நேரத்தில் தனது இரு மகள்களின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, அதன்பின், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் கைப்பட எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
 
இந்த விவகாரம், அந்த பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க முடியாது: சிபிஐ அதிரடி