தமிழகத்தில் ஊரடங்கில் அமலில் உள்ள நிலையில், ஐடி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தினேஷ் சரவணனனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தினேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதை முதல்வருக்கு டேக் செய்திருந்தார்.
அதில், வேலூரில் ஊரடங்கால் நடைபாதையில் கடை வைக்க முடியாத சிறு வியாபாரிகளிடம் 100 தர்பூசணி, 100 முலாம் பழங்களை மொத்தமாக வாங்கி தூய்மை பணியாளர்களுக்கு ஒருவருக்கு 1 தர்பூசணி, 1 முலாம் பழம் என 100 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டது
அந்த டுவீட்டுக்கு முதல்வர் பதிவிட்டுள்ளதாவது :
ஐ.டி நிறுவனத்தில் வேலை புரிகின்ற போதும், கிடைக்கின்ற நேரத்தில் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வோடு, கடைக்கோடி மக்களை தேடி உதவுதல், மரக்கன்று நடுதல் என தாங்கள் பல்வேறு சேவைகள் செய்து வருவதை சமூக வலைதளம் மூலம் அறிந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! என தெரிவித்துள்ளார்.