Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய பட்ஜெட்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்த ப சிதம்பரம்..!

Advertiesment
மத்திய பட்ஜெட்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்த ப சிதம்பரம்..!

Mahendran

, செவ்வாய், 23 ஜூலை 2024 (13:20 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த சில அம்சங்களை நிறைவேற்றி எதற்கு நன்றி என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
 
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் வாசித்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை 30ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ள வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக அளிக்கப்படும் ஊக்கத்தொகையை [ Employment-linked incentive (ELI) ]  ஏற்றுக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
 
மேலும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் 11ஆம் பக்கத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் வழங்கப்படும் ஊக்கத் தொகையை அறிமுகப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
 
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள மேலும் சில விஷயங்களை பட்ஜெட்டில் சேர்த்திருக்கலாம்.  தவறவிட்ட விஷயங்களை விரைவில் பட்டியலிடுகிறேன்” என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு.. முழு விவரங்கள்..!