Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.3 லட்சம் வரை வருமான வரி இல்லை.. மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

ரூ.3 லட்சம் வரை வருமான வரி இல்லை.. மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

Siva

, செவ்வாய், 23 ஜூலை 2024 (12:40 IST)
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் அனைவரும் எதிர்பார்த்த வருமான வரி உச்ச வரம்பு குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு புதிய வரி இல்லை.  3 லட்சம் முதல் 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5%  வருமான வரி, 7 லட்சம் முதல் 10% வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10% வருமான வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

10 லட்சம் முதல் 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 15% வருமான வரி, 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 20% வருமான வரி கட்ட வேண்டும் என்றும் 15 சதவிகிதத்துக்கு  மேல் வருமானம் பெறுபவர்கள் 30 சதவீதம் வரை வருமான வரி, கட்ட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தாமதமானால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் புதிய வருமான வரி திட்டத்தில் நிலைக்கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் முறை பணியில் சேருவோருக்கு ஒரு மாத சம்பளம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு!