Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் !

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (08:50 IST)
சென்னையில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 


 
சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள் , ரயில் நிலையங்கள் , பேருந்து நிலையங்கள், நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் என தமிழகம் முழுவதும் இன்று போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
 
காலை 7 மணியிலிருந்து இடைவெளியின்றி மாலை 5 மணி வரை  பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 
 
தமிழகம் முழுவதும் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 43,051 முகாம்கள் இதற்காக அமைக்கப்பட்டு யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
 
மேலும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் நடமாடும் ஊர்திகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.   

எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களின் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், எந்தவிதமான நோய் வாய்ப்பட்டிருந்தாலும், அதனைக் கருத்தில் கொள்ளாமல், தவறாமல் அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கி, ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அந்தந்த மாநகராட்சியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments