Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

' தூள் ’பட நடிகை தமிழக அரசுக்கு கோரிக்கை

Advertiesment
' தூள் ’பட நடிகை தமிழக அரசுக்கு கோரிக்கை
, சனி, 2 மார்ச் 2019 (15:17 IST)
தமிழ் சினிமாவில் சில அம்மாக்களையும், பாட்டிகளையும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது என்றால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அப்படி தற்போது பாட்டி கதாபாத்திரத்துக்காகக் கொண்டாடப்படுபவர் தான் நடிகை பரவை முனியம்மா. தூள் படத்தில் அறிமுகமான அவர்  பல படங்களில் நடித்திருக்கிறார்.
 
தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தவர் கூறியுள்ளதாவது.
 
எனக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த பொது எனக்கு நிரந்தர வைப்பு நிதியாக எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலமாக ரூ.6 லட்சம் வழங்கப்பட்டு அத்தொகைக்கு மாதம் ரூ. 6000 வட்டி வருகிறது அதை வைத்துத்தான் நான் குடும்பம் நடத்தி வருகிறேன். என் இறப்புக்கு பிறகு என் ஆறாவது பிள்ளை மாற்றுத்திறனாளி மகனுக்கு அத்தொகையை வழங்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
தற்போது தமிழக அரசின் சார்பில் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புருஸ் லீயிடம் குங்பூ கற்க ஆசைப்பட்ட நடனப்புயல்! 'யங் மங் சங்' குறித்து சுவாரஸ்ய தகவல்