Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனமழை எதிரொலி: சென்னை குடியிருப்புகளில் 1,000-க்கும் மேற்பட்ட பாம்புகள் மீட்பு!

Advertiesment
பாம்பு

Mahendran

, புதன், 29 அக்டோபர் 2025 (11:49 IST)
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
 
கடந்த 10 நாட்களில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 601 அழைப்புகள் பெறப்பட்டன. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 424 அழைப்புகள் வந்தன. மீட்கப்பட்டவற்றில் நாகப் பாம்பு, கட்டுவிரியான் உட்பட 103 விஷமுள்ள பாம்புகளும், 498 விஷமற்ற பாம்புகளும் அடங்கும்.
 
மேடவாக்கம், தாம்பரம், பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற தென்சென்னை பகுதிகளில் இருந்துதான் பெரும்பாலான மீட்பு அழைப்புகள் வந்துள்ளன. மீட்கப்பட்ட அனைத்து பாம்புகளும் வனத் துறையிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டன.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! யாரை காப்பாற்ற துடிக்கிறீங்க?? - திமுகவுக்கு அன்புமணி கேள்வி!