Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளனை போல மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைக்குமா?

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (17:05 IST)
பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். 

 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன் ஜாமீன் கேட்டு அளித்திருந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க நினைக்கும்போதும் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.
 
இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுனர் முடிவெடுக்க முடியாது என்றும், குடியரசு தலைவருக்கு மட்டுமே அதற்கான அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு வாதாடி வருகிறது. மேலும் தண்டனை வழங்கபட்டபோது சம்மந்தப்பட்ட அரசு தான் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை மத்திய அரசு சுட்டிக்காட்டியது.
 
சம்பந்தப்பட்ட அரசு என்பது மாநில அரசுதான் என்னும் நீதிமன்றத்தின் வாதத்தை மறுத்து, மத்திய அரசுதான் சம்பந்தப்பட்ட அரசு என குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வாதாடியது. இந்நிலையில் இறுதியாக 30 ஆண்டுகள் கழித்து பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. கடும் விவாதத்திற்கு பிறகு இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
 
இதனிடையே பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். தனித்தனியாக மனு தாக்கல் செய்தால் மற்றவர்களுக்கும் ஜாமின் கிடைக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

தனக்கு தானே சூடு வைத்த பாக்.! இந்திய விமானங்களை தடுத்ததால் கோடிக்கணக்கில் இழப்பு!

சோகத்தில் முடிந்த விளையாட்டு பயிற்சி! ஈட்டி பாய்ந்து சிறுவன் மூளைச்சாவு!

அடுத்த கட்டுரையில்
Show comments