Publish Date: Fri, 24 Dec 2021 (18:50 IST)
Updated Date: Fri, 24 Dec 2021 (18:51 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக சிறைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 7 தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பேரறிவாளன் ஏற்கனவே ஒரு சில மாதங்கள் பரோலில் உள்ள நிலையில் தற்போது அவருக்கு மேலும் ஒரு மாதம் வரை நீடிக்க படுவதாக சிறைத்துறை அறிவிப்பு செய்துள்ளது
பேரறிவாளனின் தாயார் விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த நிலையில் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Mahendran
Publish Date: Fri, 24 Dec 2021 (18:50 IST)
Updated Date: Fri, 24 Dec 2021 (18:51 IST)